குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் அறிக்கை வெளியிடுகிறார்


குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 11 பேர் மீட்கப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்படைகளின் தளபதி விபின் ராவத்துக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விபத்து நடந்த இடத்தில் ஒன்றரை மணி நேரத்துக்குத் தீப்பற்றி எரிந்ததாகவும், மலைப் பாதை என்பதால் மீட்புப் பணிகள் சிரமமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் உள்ளூர் மக்கள் மீட்புப் பணிகளில் உதவியிருக்கிறார்கள். ராணுவப் படைகள் மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டிருக்கின்றனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியிருக்கும் நிலையில், அடுத்தகட்ட ஆலோசனைகள் எடுக்கப்படுகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் அறிக்கை வெளியிடுவார் எனத் தெரிகிறது. தமிழகத்திலிருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டு அறிக்கைகள் இறுதிசெய்யப்படும்.

விபத்தில் இறந்தவர்கள் யார் யார் எனும் தகவல்கள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

x