நீதி அமைப்பை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும்!


நீதி அமைப்பை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இக்கோரிக்கையை வலியுறுத்தி நோட்டீஸ் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது:

நீதித் துறையில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடப்பது நமது நீதி அமைப்பையே அர்த்தமில்லாததாக்குகிறது. அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை விவாதிக்க அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்.

ரவிக்குமார்

10 ஆண்டுகளுக்கும் மேலாக, கீழமை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் சுமார் 45 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது . நீதித் துறையில் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்கள் இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். செப்டம்பர் 2021 நிலவரப்படி, உயர் நீதிமன்றங்களில் உள்ள மொத்தப் பணியிடங்களில் 42 சதவீதம் காலியாக உள்ளது; அதில் கீழமை நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட 21 சதவீதப் பணியிடங்கள் காலியாக உள்ளது எனத் தெரியவந்துள்ளது. காலியிடங்களை நிரப்புவதற்கான வழிகளைக் கண்டறியவும், நமது நீதி வழங்கல் முறையை அர்த்தமுள்ளதாக்கவும் மேற்கொள்ள வேண்டிய வழிகளைக் கண்டறிய அவசர விவாதம் தேவை.

இவ்வாறு ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

x