கரோனா தடுப்பூசி: இந்தியாவில் 100 சதவீத இலக்கை எட்டும் முதல் பிராந்தியம்!


லட்சத்தீவு

கரோனா தடுப்பூசியில் 100 சதவீத இலக்கை நெருங்கி உள்ளது லட்சத்தீவு!

ஒன்றிய பிரதேசமான லட்சத்தீவு, கேரள கரைக்கு அப்பால் சுமார் 250 கிமீ தொலைவில் 36 தீவுகளை உள்ளடக்கியதாய் அரபிக் கடலில் அமைந்துள்ளது.

சனிக்கிழமை(நவ.6) நிலவரப்படி, தகுதியுள்ள மக்களில் 99.20 சதவீதத்தோருக்கான தடுப்பூசிகளை லட்சத்தீவு வழங்கி உள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில், 100 சதவீத கரோனா தடுப்பூசி இலக்கை அடையும் பெருமையை லட்சத்தீவு தட்டிச்செல்ல உள்ளது.

இதற்கிடையே சனிக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 108 கோடி டோஸ்களை(108,18,66,715) தாண்டியுள்ளது.

x