பெங்களூரு: அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திநேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகசட்டப்பேரவைத் தேர்தலின்போதுஅப்போதைய ஆளும் பாஜக அரசை, எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் ஊழல் புகாரை கூறிகடுமையாக விமர்சித்து வந்தது.தேர்தலுக்கு முன்தினம் பாஜகவைவிமர்சித்து ‘40% ஊழல் அரசு'என காங்கிரஸ் விளம்பரம் வெளியிட்டது. இதை எதிர்த்து கர்நாடக பாஜக பொதுச் செயலர் கேசவ பிரசாத் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணைக்கு ராகுல், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகிய 3 பேரும் நேரில்ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ராகுல் நேற்று டெல்லியில் இருந்து பெங்களூரு வந்தார்.அவருடன் சித்தராமையா மற்றும்டி.கே.சிவகுமாரும் பெங்களூருநீதிமன்றத்தில் ஆஜராகினர். அதைத் தொடர்ந்து அம்மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
- இரா.வினோத்