பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு


பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. பண்டிகைக் காலம் நெருங்குவதால் சந்தையில் விலைவாசி அதிகரிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பாமாயில் (சுத்திகரிக்கப்படாத பனை எண்ணெய்) மீதான வரி 10 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதித் தீர்வை 7.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதித் தீர்வை 37.5 சதவீதத்திலிருந்து 32.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் சமையல் எண்ணெய்த் தேவையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேல் இறக்குமதி மூலம்தான் பூர்த்தியாகிறது. இந்தோனேசியா, மலேசியா நாடுகளிலிருந்து பாமாயிலும் ஆர்ஜென்டினா, பிரேசில், உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து சோயா, சூரியகாந்தி எண்ணெய்களும் இறக்குமதியாகின்றன.

x