தனியார் பயணியர் படகுக்கு அசாம் அரசு தடை!


புதுதில்லி:

அசாம் மாநிலத்தில், வியாழக்கிழமை முதல் தனியார் படகுகளில் பயணிகளை ஏற்றிச் செல்ல அரசு தடை விதித்திருக்கிறது.

கடந்த 8-ம் தேதி மாலை ஜோர்ஹாட் அருகில், பிரம்மபுத்திரா ஆற்றில் 2 தனியார் பயணியர் படகுகள் நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் இறந்தார், இருவரைக் காணவில்லை. இதை அடுத்து மாநில உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இருவரை இடை நீக்கம் செய்த முதலமைச்சர் ஹிமந்த விஸ்வாஸ் சர்மா, உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஒற்றை எஞ்ஜின் படகுகளைப் பொருத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அசாம் அரசு தடைவிதித்துள்ளது. ஒற்றை எஞ்ஜின் பொருத்திய படகுகளின் உரிமையாளர்கள், மாநில அரசிடம் 75 சதவீத மானிய உதவி பெற்று, உயர் ரக மரைன் எஞ்ஜின்களை அப் படகுகளில் பொருத்திப் பயன்படுத்தலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

x