உத்தராகண்ட் ஆளுநர் திடீர் பதவி விலகல்


ராணி மௌரியா

உத்தராகண்ட் மாநில ஆளுநர் ராணி மௌரியா (65), தனது பதவியிலிருந்து விலகியிருக்கிறார். விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று (செப்டம்பர் 8) அனுப்பிவிட்டார். அவருடைய பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், இம்முடிவை எடுக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

‘பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ராணி மெளரியாவுக்கு ஆளும் பாஜக முக்கியப் பொறுப்பு எதையாவது உத்தர பிரதேசத்தில் அடுத்த நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்காக வழங்கலாம், அதனால்தான் அவர் பதவி விலகியிருக்கிறார்’ என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மெளரியா, 1995 முதல் 2000 வரையில் ஆக்ரா மாநகர மேயர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

x