விக்கி
readers@kamadenu.in
‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ‘முனீஸ்காந்த்’ ராமதாஸ். குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து, சினிமாவில் நுழைந்து, இன்று வெப் சீரிஸ் வரை வெற்றிநடை போடுகிறார். ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். கண்கள் சுருங்கச் சிரிக்கும் ட்ரேட் மார்க் புன்னகையுடன் வரவேற்றார்.
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தில் என்ன கதாபாத்திரம்?
இந்தப் படத்துல தினேஷ்கூட லாரி கிளீனரா வர்றேன். கதாபாத்திரத்தின் பேரு ‘பஞ்சர்’. மனசுக்கு ரொம்பவும் நெருக்கமான கதாபாத்திரம். ‘முண்டாசுப்பட்டி’, ‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’, ‘பசங்க-2’ படங்கள் மாதிரி இதிலும் வித்தியாசமான கேரக்டர். படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரையின் அறிவுத் திறமையைப் பார்த்து எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கும். இந்த வயசில் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சு இருக்குமான்னு ஆச்சரியப்படுவேன். நிறைய படிப்பார், ஷூட்டிங் ஸ்பாட்ல எங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லித் தருவார்.