“கோயில், மசூதி பற்றி 421 முறை பேசினார் பிரதமர் மோடி” - கார்கே


மக்களவை தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி ரீதியாக, மத ரீதியாக மக்களிடம் ஓட்டு கேட்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கோயில்-மசூதி, மக்களை பிளவுபடுத்தும் விஷயங்கள் பற்றி 421 முறை பேசினார்.

கடந்த 15 நாளில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் பெயரை 232 முறையும், தனது பெயரை 758 முறையும் கூறினார். ஆனால் வேலையின்மை பற்றி ஒரு முறைகூட பேசவில்லை. இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும். ஜுன் 4-ம் தேதி மாற்று அரசு அமைவதற்கான தீர்ப்பை மக்கள் வழங்குவர் என நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். இந்த அரசுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், அது ஜனநாயகத் துக்கு முடிவு கட்டும் என்ற எங்களின் கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

x