அயோத்தி விவகாரம்: அவசரச் சட்டம் சாத்தியமில்லை!


கோபால்

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில் அயோத்தி ‘ராமஜென்மபூமி’ விவகாரம் மீண்டும் தலைதூக்கி இருக்கிறது.

1992-ல் இந்துத்துவ அமைப்புகள் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தன. அவ்விடம் ராமர் பிறந்த இடம் என்றும் அங்கு இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் 1528-ல் பாபர் மசூதி கட்டப்பட்டது என்றும் அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று ராமஜென்ம பூமி இயக்கத்தைச் சேர்ந்த இந்து அமைப்புகளும் மசூதி கட்டப்பட வேண்டும் என்று சன்னி வக்பு வாரியமும் வழக்குத் தொடுத்தன. இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை, 2019 ஜனவரியில் தான் தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இதனால், அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு, தேர்தலுக்குப் பிறகே வரும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் விஹெச்பி உள்ளிட்ட அமைப்புகள், நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி அயோத்தியில் ராமர்  கோயில் கட்ட வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டவட்டமான நிலைப்பாடு. இந்நிலையில் முத்தலாக் விவகாரத்தைப் போல் அயோத்தி விவகாரத்திலும் அவசரச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கையிலெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

x