தூய்மையான அரசியல் பயணத்தின் அடுத்த மைல்கல்!


மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, குற்றவழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஆனால், குற்றம் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்படாதவரை அவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்; பதவிகளை வகிக்கலாம், குற்றவியல் வழக்குடன் இருப்பவர்கள் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகப் பலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது அமலுக்கு வந்தால், நிரபராதிகள் மீதும் குற்ற வழக்குகளை ஜோடனை செய்து அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுத்துவிடும் சாத்தியங்கள் இருக்கிறது என்பதால் இந்தக் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.

அதேசமயம் இந்த ஓட்டையைப் பயன்படுத்தி, செய்த குற்றம் நிரூபிக்கப்படாத பலர் தேர்தலில் போட்டியிடுவதும் அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த பதவிகளை வகிப்பதும் தொடரத்தான் செய்கிறது. இந்தியாவில் தற்போது 1,700 எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக மூன்றில் ஒரு மக்களவை உறுப்பினர் மீது ஒரு குற்றவியல் வழக்காவது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், குற்றவியல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த வாரம் நிராகரித்தது. அதேநேரம், இந்திய அரசியலில் குற்றம் கறை படிந்தோர் அதிகரித்துவிட்டார்கள் என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளது உச்ச நீதிமன்றம். அரசியலில் குற்ற செய்திருக்கக்கூடியவர்களின் பங்கேற்பைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், ஒரு வேட்பாளர் மீது குற்றவியல் வழக்குகள் இருக்கிறதா என்பதை வாக்காளர்களுக்குத் தெரியப்படுத்த பின்வரும் வழிகாட்டுதல்களைக் கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்:

x