பெயர்மாற்றம் மட்டுமே சீர்திருத்தம் அல்ல!


அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டுவரும் பல்கலைக்கழக மானியக் குழுவை  (யுஜிசி) நீக்க முடிவெடுத்துள்ளது மத்திய அரசு.

பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு, இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்.

1956-ல், உருவாக்கப்பட்டது யுஜிசி. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின்  செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் கல்வித் தரத்தைப் பேணுவதும்தான் இந்த அமைப்பை உருவாக்கியதன் நோக்கம். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்புதான் உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

இதற்கு மாற்றாக வரவிருக்கும் புதிய ஆணையம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் தர மேம்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்தும். பாடங்களின் பயன் நோக்கங்களை நிர்ணயிப்பது,  ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டை மதிப்பிடுவது, தர அளவுகோல்களை நிறைவேற்றாத கல்வி நிறுவனங்களை மூட உத்தரவிடுவது ஆகியவையே இதன் பணிகளாக இருக்கும். நிதி ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்துக்கொள்ளும் அல்லது அதற்கு வேறு ஏற்பாடு செய்யப்படும் என்றும் வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

x