அரசியலால் எட்டாக்கனியாகும் அமைதி!


காஷ்மீர் மக்களுக்கு அச்சத்தை அல்ல... அமைதியைத் தர முன்வர வேண்டும் மத்திய அரசு.

காஷ்மீரில் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் ஆகியோருக்கு எதிராக இந்திய அரசும் ராணுவமும் பல ஆண்டுகளாக நடத்திவரும் போரில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அப்பாவி மக்கள்தான். அந்த மக்களுக்கு அமைதியான வாழ்க்கை என்பது எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது.

2016-ல், பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது மக்கள் ஜனநாயகக் கட்சி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் இருந்தாலும் காஷ்மீர் மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்களும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளும்தான் அதிகரித்துள்ளன. இளைஞர்கள் பயங்கரவாதத்தை நோக்கிச் செல்வதும் பிரிவினைவாதிகளை மக்களே ஆதரிக்கும் நிலையும் அதிகரித்துள்ளன. பயங்கரவாதிகளுக்கும் அரசின் ஒடுக்குமுறைப் போக்குக்கும் நடுவில் அப்பாவி மக்கள் அகப்பட்டுக்கொண்டதால் ஏற்பட்ட விளைவு இது!

கடந்த மாதம் ரமலான் பண்டிகையையொட்டி போர் நிறுத்தத்தை அறிவித்தது மத்திய அரசு. இந்தப் போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்களுடன் அரசு சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் மக்கள் விரும்பினார்கள்.

x