தூத்துக்குடியைப் போல் குஜராத்திலும் ஒரு போராட்டம்


குஜராத்தில் 5,000 விவசாயிகள் கூட்டுத் தற்கொலை செய்துகொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய - மாநில அரசுகளால் விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால், இந்தியா முழுவதுமே கதிராமங்கலங்களும் நெடுவாசல்களும் உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன. அதைத்தான் குஜராத் விவசாயிகளின் கூட்டுத் தற்கொலை எச்சரிக்கை நமக்கு உணர்த்துகிறது.

1997-ல், குஜராத் மின் பகிர்மானக் கழகமானது அனல் மின் நிலையம் அமைக்கத் திட்டமிட்டது. அதற்கான நிலக்கரி எடுப்பதற்காக பாவ் நகர் மாவட்டத்தின் கோகா தாலுக்காவில் உள்ள 12 கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1894-ன் கீழ் இந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஒரு ‘பிகா’வுக்கு (கிட்டத்தட்ட ஒரு ஏக்கருக்குச் சமம்) ரூ. 45,000 முதல் 53,000 வரை நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த 21 ஆண்டுகளாக, கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எந்த விதமான சுரங்க வேலைகளும் நடை பெறவில்லை. எனவே, நிலங்களை விவசாயத்துக்கும் கால்நடைகளை மேய்ப்பதற்கும் நில உரிமையாளர்கள் பயன்படுத்திவந்தனர். தற்போது திடீரென்று மின் பகிர்மானக் கழக நிறுவனம் நிலங்களை எடுத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளது.

x