2028-ல், மக்கள் தொகையில் டெல்லி முதலிடம்!


2028-ல், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக இந்தியத் தலைநகர் புது டெல்லி இருக்கும் என்கிறது ஐ.நா. சபை. தற்போது 3.70 கோடி மக்களுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது. டெல்லியில் 2.90 கோடி பேர் வசிக்கின்றனர். ஏற்கெனவே காற்று மாசுபாட்டால் வாழத் தகுதியற்ற நகரமாக மாறிக்கொண்டிருக்கும் டெல்லியில், மக்கள்தொகை இன்னும் அதிகரித்தால் என்ன ஆகும் என்பதைத் தனியாக விளக்கத் தேவையில்லை. மத்திய - மாநில அரசுகள் செயலில் இறங்க வேண்டிய தருணம் இது.

வருகைப் பதிவுக்கு ‘ஜெய்ஹிந்த்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாணவர்கள் இனிமேல் பள்ளிகளில் ‘உள்ளேன் ஐயா, உள்ளேன் அம்மா’ என் பதற்குப் பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ என்று சொல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் விஜய் ஷா எட்டு மாதங்களுக்கு முன்பே இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போதே இதை சில பள்ளிகள் பின்பற்றத் தொடங்கிவிட்டன. இப்போது அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த விதி கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. ”ஒவ்வொரு நாளும் மாணவர்கள் ஜெய்ஹிந்த் சொல்வதன்மூலம் அவர்களுடைய நாட்டுப்பற்றை அதிகரிக்க முடியும். வேறுபாடுகள் கடந்து மாணவர்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த முயற்சி இருக்கும்” என்கிறார் அமைச்சர் விஜய் ஷா. இதை அமல்படுத்திய பள்ளிகளில் மாணவர்களிடம் நல்ல மாற்றங்கள் தெரிவதாக ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

தேர்தலில் தோற்றதால் தற்கொலை!

x