தேர்வில் வெற்றிபெற்றால் ரூ.1 லட்சம் பரிசு


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் முதல் நிலைத் தேர்வில் வெற்றிபெறும் எஸ்.சி./எஸ்.டி.மாணவர்கள், அடுத்த கட்டத் தேர்வுகளுக்குத் தயாராக ரூ.1 லட்சம் உதவித்தொகை அறிவித்திருக்கிறது பீஹார் அரசு. அதுமட்டுமல்ல, மாநில அரசுத் தேர்வாணையத்தின் முதல் கட்டத் தேர்வில் வெற்றிபெறும் இப்பிரிவு மாணவர்களுக்கும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கவும், மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதுவும் அவற்றில் ஒன்றுதான் என்றாலும், பின்தங்கிய மக்களின் கல்விக்கு உதவும் எந்தத் திட்டமும் வரவேற்கத்தக்கதே.

ஆழ்துளைக் கிணறுகளுக்குத் தடை

தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதைத் தடுக்க அங்கே 230 கிராமங்களில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயிர்கள் வாடிவிடாமல் பாதுகாக்க விவசாயிகள் இப்போதுள்ளதைக் காட்டிலும் ஆழத்தில் கிணறு அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இதனால், நிலத்தடி நீர் மட்டம் சீக்கிரமே குறைந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. வாரங்கல், மஹபூபாபாத், பூபால்பல்லி, ஜங்கான் உள்ளிட்ட மாவட்டங்களில் மார்ச் மாதத்திலேயே நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. எனவேதான், அரசு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அரசு நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் ஒத்துழைக்க வேண்டுமே!

மோடியின் வேலை வாய்ப்பு அரசியல்

x