இது பன்மொழி ஒற்றுமை!


இது பன்மொழி ஒற்றுமை!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வங்க மொழி சீரியல்களை விரும்பிப் பார்ப்பாராம். சீரியல்கள் மூலம் பிற்போக்குக் கருத்துகளும் பழமைவாத மதிப்பீடுகளும் பரப்பப்படுவதாகக் குற்றம்சாட்டும் மம்தா, “பெரும்பாலான சீரியல்களில் ஒருவருக்கு இரண்டு மூன்று மனைவிகள் இருப்பது, குடும்ப நபர்கள் ஒருவரை மற்றவர் பழிவாங்க சதித்திட்டம் போடுவது என மிக மோசமான கருத்துகள் திணிக்கப்படுகின்றன. தயவு செய்து இப்படியெல்லாம் காட்டாதீர்கள். இதுபோன்ற எதிர்மறையான விஷயங்கள் மக்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும்” என்று கூறியுள்ளார். இந்திய மொழிகளில் வரும் பெரும்பாலான சீரியல்களின் கதை இதுதான் போலிருக்கிறது. தீதியின் பேச்சைக் கேட்டாவது சீரியல் இயக்குநர்கள் சிந்திக்கட்டும்!

சவுத்ரியின் சவுக்கடி

சினிமாத் துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி பல சினிமாப் பிரபலங்கள் பேசிவருகிறார்கள. இந்த நிலையில், “நாடாளுமன்ற அரசியலிலும் பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன” என்று வெடிகுண்டைப் போட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப் பினர் ரேணுகா சவுத்ரி. நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியைச் சேர்ந்த மூத்த பெண் பிரதிநிதி அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றி இப்படிக் குற்றம்சாட்டியிருப்பது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆனால், சவுத்ரியின் குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்த அரசியல் கட்சியும் எதிர்வினையாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x