மூன்றாம் பாலினத்தவருக்கு மற்றுமொரு அங்கீகாரம்!
ஆதார் அட்டை விண்ணப்பத்தில் மூன்றாம் பாலின அடையாளத்தைக் குறிப்பிடும் வசதி இருக்கிறது. ஆனால் ‘பான் கார்டு’ விண்ணப்பத்தில் இதுவரை ஆண், பெண் என்ற இரு தேர்வுகள் மட்டுமே இருந்தன. இதனால், ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பது மூன்றாம் பாலினத்தவர்களுக்குச் சிரமமாக இருந்தது.
இந்நிலையில், தற்போது நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் பான் விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினம் என்ற தேர்வைச் சேர்ப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மேலும் ஒரு அங்கீகாரம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. ஆனாலும், சம உரிமைகளுக்காக மூன்றாம் பாலினத்தவர்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது.
தங்க முதலாளி!