நேருவின் வீட்டைக் காத்த நீதிமன்றம்!


நேருவின் வீட்டைக் காத்த நீதிமன்றம்!

டெல்லியில் பாரம்பரிய சிறப்பு மிக்க எட்டுக் கட்டிடங்களில் சட்டவிரோதமான கட்டுமான வேலைகள் நடைபெறுவதாக ஒரு வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு வசித்த மாளிகையும் (ஹவேலி) அங்குள்ள கட்டுமானத் தொழிலதிபர்களின் பிடியில் சிக்கியிருப்பதாகத் தெரியவந்தது. இந்த மாளிகையில்தான் நேரு-கமலா திருமணம் நடைபெற்றது. இப்போது, இந்த பாரம்பரியக் கட்டிடங்களில் நடக்கும் சட்டவிரோதக் கட்டுமானப் பணிகளைத் தடுக்க டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். கூடவே, இவை எப்படி அனுமதிக்கப்பட்டன என்று டெல்லி மாநகராட்சியிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது.

சுவாமியின் முட்டுக்கட்டை

x