தேசத்தின் முகத்தில் பிஞ்சுகளின் ரத்தம்!


காஷ்மீரில் கடந்த 15 ஆண்டுகளில்  318 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் மிக அழகான மாநிலம் என்ற பெயரை இழந்து வெகுகாலமாகிவிட்டது.

அங்கு 1990-களில், பிரிவினைவாதக் குழுக்களின் செயல்பாடுகள் தீவிரமடைந்தன. அவர்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், மக்களை எந்நேரமும் பதட்ட சூழலிலேயே வைத்திருக்கிறது இந்திய ராணுவம். கடந்த சில ஆண்டுகளில் காஷ்மீரில் குடிமக்கள் கொல்லப்படுவதும், ‘பெல்லட்’ குண்டுகளால் தாக்கப்பட்டு பார்வை இழப்பதும் அதிகரித்திருக்கின்றன.

அண்மையில் ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகக் கூட்டணி (ஜேகேசிசிஎஸ்) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. காஷ்மீர் வன்முறை கடந்த 15 ஆண்டுகளில் 318 குழந்தைகளையும் சிறுவர்களையும் விழுங்கியிருக்கிறது. இவர்களில் 144 பேர் இந்தியப் பாதுகாப்புப் படை, ஜம்மு-காஷ்மீர் காவல்துறையால் கொல்லப்பட்டவர்கள். 12 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

x