வன்முறைக்கு வித்திட்ட ராம நவமி ஊர்வலங்கள்?


மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்க்கானா மாவட்டத்தில் கன்கினரா என்ற பகுதியில் இருந்த மவுலானா அபுல்கலாம் ஆசாத்தின் சிலை, மர்மக் கும்பலால் சேதப் படுத்தப்பட்டது. சிலையை உடைத்துத் தள்ளும் வீடியோவைப் பார்த்தபோதுதான், அதற்கும் அம்மாநிலத்தில் நடந்த ராம நவமி ஊர்வலங்களுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.

ராம நவமி ஊர்வலங்களால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விளைந்த வன்முறைக்கு இதுவரை, ரிக்‌ஷா ஓட்டுநர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை அதிகாரி ஒருவர் கையை இழந்துள்ளார், முப்பதுக்கும் மேற்

பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரம் நடந்த பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் வன்முறை சம்பவங்கள் பற்றிய அறிக்கையை மாநில அரசு அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தின் முக்கிய பண்டிகையான துர்கா பூஜையின்போது, கடந்த ஆண்டு சில இடங்களில் வன்முறை வெடித்தது. கடந்த சில ஆண்டுகளாக அங்கு ராம நவமி ஊர்வலங்களை நடத்திவருகிறது பாஜக. இந்த ஆண்டு, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பிலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இரண்டு கட்சியினருக்கும் இடையில் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. பாஜக நடத்திய ஊர்வலம் ஒன்று, அனுமதி இன்றி இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்குள் சென்றது. அப்போது ஊர்வலத்தில் ஒலித்த பாடலுக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலவரம் உருவானது.

x