மாசில்லாக் காற்று மந்திரிகளுக்கு மட்டும்!


டெல்லியில் காற்று மாசுபாடு பொதுமக்களை எப்படி வாட்டி வதைக்கிறது என்பது தொடர் செய்திதான். ஆட்சியாளர்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு இந்தச் செய்தி.

பிரதமர் மோடியின் அலுவலகம் தொடங்கி நிதி ஆயோக், சுகாதாரம், விவசாயம், சுற்றுலா, உள்துறை, வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகங்களின் உயர் அதிகார இடங்கள் அனைத்திலும் சுத்தமான காற்று புழங்கத் தக்க வகையில் ‘ஏர் ப்யூரிஃபையர்’ கருவிகளை பொருத்தியிருக்கிறார்கள்.

இதற்கெனவே நிதி ஒதுக்கீடும் நடந்திருக்கிறது. வசதியும், அதிகாரமும் இருப்பவர்களுக்குத்தான் சுத்தமான காற்றுக்கு உரிமையுண்டுபோல் இருக்கிறது!

x