சிறப்பாக வாழ்வதற்கான நகரங்களின் பட்டியலில், இந்திய நகரங்களில் ஹைதராபாத் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது. கூடவே, இந்த ஆண்டு புனேவும் அந்த இடத்தைப் பகிர்கிறது. ‘மேசர்’ எனும் மனிதவள ஆலோசனை நிறுவனம் நடத்தும் ஆய்வின் அடிப்படையிலான பட்டியல் இது. பட்டியலில் உலக அளவில் முதல் இடத்தைப் பெற்றிருப்பது வியன்னா. இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ள ஹைதராபாத், புனே ஆகியவை சர்வதேச அளவில்
142-வது இடத்தையே பிடிக்க முடிந்திருப்பது, இந்திய நகரங்களின் தரத்துக்கு அத்தாட்சி. இந்திய அளவிலேயே கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி, சர்வதேச அளவில் 162-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. தரவரிசையில் சென்னையின் இடம் 151.