தெலங்கானாவில் பத்தாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளும் தெலுங்கை கட்டாய மொழிப் பாடமாக கற்பிக்க வைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றப்போகிறார் முதல்வர் கே.சந்திரசேகர ராவ். மாநில மொழியைக் கட்டாயமாக்குவதை தனியார் பள்ளி அமைப்புகள் சில கடுமையாக எதிர்த்துவரும் சூழலிலும் துணிச்சலாக நிற்கிறார் சந்திரசேகர ராவ்!