பான் அட்டையும், மூன்றாம் பாலினமும்


மூன்றாம் பாலினத்தவர்கள் மேலே வரவர, சிக்கல்களும் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. ரூ.50,000-க்கு அதிகமான வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு பான் எண் அவசியம். ஆனால், உத்தர பிரதேசத்தின் பரேலி நகரைச் சேர்ந்த திருநங்கை மோகினி பான் அட்டைக்காக விண்ணப்பித்தபோது, அதில் சிக்கல் இருப்பது தெரியவந்திருக்கிறது. மோகினியின் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகள் அவரைத் திருநங்கை என்கின்றன.

ஆனால், பான் அட்டைக்கு மூன்றாம் பாலினத்தவராக விண்னப்பிக்க வழியில்லை. ஆண் என்றோ பெண் என்றோ விண்ணப்பித்து பான் அட்டையைப் பெற்றுவிட்டால் அவரை திருநங்கை என்று குறிப்பிடும் ஆதாருடன் அதை இணைக்க முடியாது. இந்தக் குளறுபடியால் நாட்டில் எண்ணற்ற மூன்றாம் பாலினத்தவர் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமான வரித்துறை விரைந்து செயலாற்ற வேண்டும்!

x