இந்தி ஆதிக்கமே அடங்கு


எப்போதோ தமிழகம் பற்றவைத்த இந்தி ஆதிக்க எதிர்ப்பு நெருப்பு, இந்தி பேசாத மாநிலங்களில் பற்றிப் பரவிக்கொண்டிருக்கிறது.

கடைகள், வியாபார நிறுவனங்கள் பெயர் பலகைகளில் ஒடிய மொழியே பிரதானமாக இருக்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் மேற்கொண்டிருக்கிறது ஒடிசா அரசு. பெயர்ப்பலகையில் ஒடிய மொழி இல்லை என்றாலோ, மற்ற மொழிகளில் இருப்பதைவிட சிறியதாக இருந்தாலோ ரூ,1000 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும்.

விதிமீறல் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது சட்டம். இப்படி ஒரு சட்டத்தை தமிழகத்தில் 2010-ல் கருணாநிதி அரசு கொண்டுவந்தது. கர்நாடகத்தில் 2015-ல் சித்தராமையா அரசு கொண்டுவந்தது

x