மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு, மத்திய அரசின் சமூக நீதித் துறை மாநிலங்களுக்கு ரூ.8,600 கோடி தர வேண்டும்.
ஆனால் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.3000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தலித் மாணவர்களுக்கான ‘உயர்நிலைப் பள்ளிக் கல்வி உதவித் தொகை’க்கு ஒதுக்கப்பட்ட ரூ.50 கோடியில் ரூ.35 கோடி மட்டுமே இதுவரை கிடைத்திருக்கிறது. முக்கியமான சமூக நீதித் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டிலேயே இவ்வளவு சிக்கல்கள் கூடாது!