உத்தர பிரதேசத்திலும், பிஹாரிலும் நடைபெற்ற மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது.
2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகான 23 இடங்களுக்கான இடைத்தேர்தல்களில் வெறுமனே 4 இடங்களை மட்டுமே பாஜக வென்றிருக்கிறது. இதனால், ஆட்சி அமைத்தபோது மக்களவையில் 282 ஆக இருந்த பாஜகவின் பலம் இப்போது 272 ஆக குறைந்துவிட்டது.
அதேநேரத்தில், மொத்தம் 5 இடங்களில் வென்று காங்கிரஸ் கொஞ்சம் தலைநிமிர்ந்திருக்கிறது. இதற்கு மேலும் இடைத் தேர்தல்கள் வந்து பாஜக தோற்றால், ‘மைனாரிட்டி’ அரசாகிவிடும்!