மாநிலத்தில் முதலிடம்; ‘இளம் கவிஞர் விருது’ பெற்ற சிவகங்கை அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு!


சிவகங்கை: இளம் கவிஞர் விருது பெற்ற அரியக்குடி அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பள்ளி கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கவிதைப் போட்டியில் பங்கேற்றனர்.

இதில் சிவகங்கை மாவட்டம் அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி ரா.சண்முகஷிவானி முதலிடம் பெற்றார். அவருக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இளம் கவிஞர் விருதும், ரூ.1 லட்சம் பரிசும் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் வி.ஜே.பிரிட்டோ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

x