திருச்சி மத்திய சிறையில் பிளஸ் 2 தேர்வெழுதிய 23 கைதிகள்!


கோப்புப் படம்

திருச்சி: திருச்சி மத்தியச் சிறையில் ஒரு பெண் உட்பட 23 பேர் இன்று பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று துவங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருச்சி வருவாய் மாவட்ட அளவில் 106 அரசுப்பள்ளிகள், 71 அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 81 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 258 பள்ளிகளில் இருந்து, 131 தேர்வு மையங்களில், 14,716 மாணவர்கள், 15,864 மாணவிகள் என மொத்தம் 31,580 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

திருச்சி மத்தியச் சிறையில் ஒரு பெண் உட்பட, 23 பேர் இன்று பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். மேலும், 342 ஆண்கள், 207 பெண்கள் என மொத்தம் 549 பேர், 11 தேர்வு மையங்களில் தனித் தேர்வர்களாக பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்கின்றனர். பிளஸ் 2 தேர்வெழுதும் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக 324 சொல்வரை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் நாளான இன்று, 34 வழித்தட அலுவலர்கள் மூலம் 131 தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன.

தேர்வுக்காக 131 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 131 துறை அலுவலர்கள் மற்றும் 21 கூடுதல் துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 220 பறக்கும் படையினர் தேர்வு முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய நியமனம் பெற்றுள்ளனர். திருச்சி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 1023 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடி கல்வி மாவட்டத்தில் 621 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர். திருச்சி வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 1644 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

x