செயல்படாத மாணவர் வங்கி கணக்குகள்: கல்வி துறை உத்தரவு


சென்னை: கல்வி உதவித் தொகை பெறவுள்ள பள்ளி மாணவர்களின் செயல்படாத வங்கிக் கணக்கு விவரங்களை சரிசெய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஏதுவாக வங்கி கணக்கு தபால் அலுவலகங்கள் வாயிலாக தொடங்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, உதவித் தொகை பெறுவதற்காக நிலுவையில் உள்ள மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் மற்றும் இந்திய தேசிய நிதி கழகத்தால் செயல்படாத வங்கிக் கணக்குகள் குறித்த தரவுகளும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஒரு செயல்திட்டமாக உருவாக்கி நிலுவையில் உள்ள அனைத்து பட்டியலையும் துரிதமாக முடிக்க வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், புதுப்பிக்கப்பட்ட பட்டியலை சரியாக முடித்து கொடுக்க தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x