ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே உள்ள குருசடை தீவில் இந்திய வனவிலங்கு நிறுவன மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மன்னார் வளைகுடா கடற்பரப்பில் ராமேசுவரம் அருகே உள்ள குருசடை தீவு உயிரியலாளர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீவைச் சுற்றி பவளப் பாறைகள், கடல் பாசி, கடல் தாவரங்கள், சங்குகள், சிப்பிகள், கடல் பாலுட்டிகள் டால்பின், கடல் பசு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. மேலும் இந்த தீவு சர்வதேச ராம்சார் தளமாகவும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு குருசடை தீவில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ், மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.