இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையின்றி முதல்வர் தனித்திறன் தேர்வு நடத்த எதிர்பார்ப்பு


சென்னை: இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையின்றி முதல்வரின் தனித்திறன் தேர்வில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்கத் தொகை பெறுவதற்காக நடத்தப்படும் முதல்வரின் தனித்திறன் தேர்வில், வெற்றி பெறுவோரை தேர்வு செய்வதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் மட்டும் முதல்வரின் தனித்திறன் தேர்வு நடந்தது. இவ்வாண்டு முதல் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவர்களும் எழுதலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 120 மதிப்பெண்களுக்கு கணிதம் (60 மதிப்பெண்), அறிவியல், சமூக அறிவியல் (தலா 30 மதிப்பெண்) ஆகிய 3 பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.

இத்தேர்வு மூலம் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா ரூ.1000 உயர் கல்விக்கென ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்தேர்வு 2025 ஜன.,25ம்தேதி நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் டிச.,9 க்குள் விண்ணப்பிக்கவேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு நடத்தப்படும் என, கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இத்தேர்வு முறை குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வில் கூடுதல் மதிப்பெண் அடிப்படையில் மாவட்டதோறும் முதல் 50 மாணவர்கள், 50 மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதிலும் மாவட்டம் வாரியாக அதிக மதிப்பெண் என்ற முறையில் 100 மாணவர்கள் தேர்வு செய்து, மாதந்தோறும் தலா ரூ.500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இருப்பினும், முதல்வரின் தனித்திறன் தேர்வு என்பது மதிப்பெண், இடஒதுக்கீடு முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதி, திறமை இருந்தும் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கு உதவித் தொகை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையின்றி பிற உதவித்தொகை தேர்வுகள் போன்றே இத்தேர்வையும் நடத்தவேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர்களை தேர்வு செய்து உதவித்தொகை வழங்கவேண்டும்''. இவ்வாறு அவர்கள் கூறினர்.

x