கோடை கால பயிற்சி 6 மாதமாக நீட்டிப்பு: சென்னை ஐஐடி அறிவிப்பு


சென்னை: பிடெக் மாணவர்களின் கோடை காலபயிற்சிக்கான அளவை 6 மாதமாகசென்னை ஐஐடி நீட்டித்துள்ளது. சென்னை ஐஐடியில் பிடெக் படித்து வரும் மாணவர்கள், அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு கோடைகால பயிற்சிக்கு (சம்மர் இன்டர்ன்ஷிப்) செல்கின்றனர். இதற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களும், மாணவர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். அதை ஏற்று கோடைகால பயிற்சியை 6 மாதமாக சென்னை ஐஐடி நீட்டித்துள்ளது. தொழில் துறை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் கருத்துகளை பெற்ற பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னைஐஐடி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘‘பிடெக் மாணவர்கள் சிறந்த தொழில் முறை திறமைகளை பெறுவதற்கு இந்த பயிற்சிகள் வழிசெய்யும். 2024-25-ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் தங்களின் 6-வது செமஸ்டரில் இந்தஇன்டர்ன்ஷிப்பை தேர்வு செய்யவேண்டும். அந்த காலக்கட்டத்தில்அவர்கள் கட்டாய பாடப் பிரிவுகளை (கோர் கோர்சஸ்) தேர்வுசெய்ய வேண்டியதில்லை. மேலும்,விருப்ப பாடங்களை அதற்குமுந்தைய, பின்னரான செமஸ்டர்களில் படித்துக் கொள்ளலாம்’’ என்றனர்.

x