சிவகாசியில் நோட்டு புத்தகம் தயாரிப்பு பணி நிறைவு - கடந்த ஆண்டை விட 15% வரை விலை குறைவு


சிவகாசியில் உள்ள பிரின்டிங் நிறுவனத்தில் நோட்டு புத்தக இறுதிக்கட்ட உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

சிவகாசி: சிவகாசியில் உள்ள அச்சகங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கான நோட்டுப் புத்தகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. பேப்பர் விலை குறைவால் கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் விலை குறைந்துள்ளது.

சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத் தொழில் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர். சிவகாசியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அச்சகங்களில் சீசன் அடிப்படையில் காலண்டர், பாடப்புத்தகங்கள், நோட் புக், டைரி மற்றும் இந்திய அளவில் அனைத்து தொழில்களுக்கும் தேவையான வர்த்தக லேபிள் கள் ஆகியவை உற்பத்தி செய்யப் படுகின்றன.

காலண்டர் உற்பத்தி முடிந்த பின்னர் ஜனவரி முதல் மே மாதம் வரை பள்ளி, கல்லூரிகளுக்குத் தேவையான நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. 20 பக்கங்கள் முதல் 320 பக்கங்கள் வரை உள்ள120 வகையான நோட்டு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, நோட்டு புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கரோனா ஊரடங்குக்கு பின்பு நோட்டு புத்தகங்களின் விலை உயர்ந்து வந்தது. கடந்த ஆண்டு ரூ.1.15 லட்சமாக இருந்த ஒரு டன் பேப்பர் விலை, இந்த ஆண்டு ரூ.85 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நோட்டு புத்தகங்களின் விலை 15 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இதுகுறித்து சீமா நோட் புக் உரிமையாளர் ஏ.மாரிராஜன் கூறியதாவது: நோட் புக் தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருளான பேப் பர் விலை மட்டும் குறைந்துள் ளது. அதேநேரம் மற்ற மூலப் பொருட்களின் விலை குறைய வில்லை. தற்போது நோட்டு புத்தகங்களை மொத்த வியாபாரி களுக்கு அனுப்பும் பணி நடை பெற்று வருகிறது. அடுத்த வாரத் தில் இந்த ஆண்டுக்கான நோட்டு புத்தக விற்பனை முழுமையாக முடிந்துவிடும் என்று கூறினார்.

x