தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பிளஸ்-1 பொதுத் தேர்வில் 91.17 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2024ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொது தேர்வுகளை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. இதன்படி காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் தேர்வெழுதிய 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் ஒன் தேர்வில் 4,04,143 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.69 சதவீதமாக உள்ளது. மாணவர்கள் 3,35,396 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 87.26 சதவீதமாக உள்ளது. மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் 7.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்வு முடிவு்களை http://tnresults.nic.in, http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.