சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 87.98 சதவீதம் பேர் தேர்ச்சி!


10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி துவங்கிய ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

கடந்த 2023ம் ஆண்டு 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 0.65 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் 91 சதவீதம் பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை காட்டிலும் 6.4 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மண்டல வாரியாக தேர்ச்சி விகிதம்

நாட்டிலேயே அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலம் 99.91% தேர்ச்சி விகிதத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. விஜயவாடா 99.04 சதவீதத்துடன் 2வது இடத்தையும், 3வது இடத்தில் சென்னை 98.47 சதவீத தேர்ச்சியுடனும் உள்ளது. குறைந்தபட்சமாக போபால் 82.46 சதவீதமும், புவனேஸ்வர் 83.34 சதவீதமும், பாட்னா 83.59 சதவீதமும் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...


குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

x