மனம் தளர வேண்டாம்... மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!


முதல்வர் ஸ்டாலின்

தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 ஆக அதிகரித்துள்ளது. எப்போதும் போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.

'பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்' என்று முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கோவிஷீல்டு களேபரங்கள்... உயிர்காக்கும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பயமுறுத்தக் கூடியதா?

x