பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களும், மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்களும் நாளை முதலே விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. 7,60,606 பேர் தேர்வு எழுதிய நிலையில், 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.56 சதவீதமாக உள்ள நிலையில், 41,410 பேர் இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் உடனடியாக மறுத்தேர்வு எழுதி அதன் மூலம் நடப்பாண்டில் கல்லூரிகளில் சேர்க்கை பெற வசதி வாய்ப்பு உள்ளது. எனவே, மாணவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள், நாளை முதலே இதற்காக விண்ணப்பிக்கலாம். தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவே மாணவர்கள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டுக்கு கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 505 ரூபாய் செலுத்த வேண்டும். 10 முதல் 15 நாட்களுக்குள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு அதன் தகவல்கள் தெரிவிக்கப்படும்.
இதே போல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், பாடம் ஒன்றுக்கு தலா 205 ரூபாயும், இரண்டு பாடங்கள் ஒன்றாக இருந்தால், அதற்கு 305 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். மாணவர்கள் சிலர் தங்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இவர்களின் வசதிக்காக அந்த விடைத்தாள்களின் நகல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது.
இதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் போது ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகல்களை, மாணவர்கள் இணையத்தில் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதையும் வாசிக்கலாமே...
கோவிஷீல்டு களேபரங்கள்... உயிர்காக்கும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பயமுறுத்தக் கூடியதா?
அயோத்தி கோயிலில் மீண்டும் மோடி.... தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு!
ஹாலிவுட்டில் சோகம்... டைட்டானிக் பட நடிகர் திடீர் மரணம்!
இன்று முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!
இன்று ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!