+2 தேர்வு எழுதிய தமிழக சிறைவாசிகளில் 92.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் மறுவாழ்வு, மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் கல்வி முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் உள்ளது. சிறைவாசிகளில் பெரும்பாலானோர் எழுத படிக்க தெரியாதவர்கள் என்பதால் சிறைகளில் பல்வேறு எழுத்தறிவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விடுதலைக்குப் பின்னர் சிறைவாசிகளை வாழ்வாதார பணிகளில் ஈடுபடும் வண்ணம் தயார்படுத்தும் நோக்கில் பல்வேறு கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட ஆரம்பப் பள்ளிகள் அனைத்து மத்திய சிறைகள், பெண் தனி சிறைகள் ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு வெவ்வேறு சிறைகளை சேர்ந்த 6 பெண் சிறைவாசிகள் உட்பட மொத்தம் 125 சிறைவாசிகள் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கோரிக்கையின் படி, மாநில பள்ளிக் கல்வித்துறையால் சிறைவாசிகள் அந்தந்த சிறையிலேயே தேர்வு எழுதிட வழிவகை செய்யப்பட்டது. அவர்களில் 4 பெண் சிறைவாசிகள் உட்பட 116 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.8% தேர்ச்சி விகிதமாகும்.
இதில் மதுரை மத்திய சிறையைச் சேர்ந்த சிறைவாசிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். ஆரோக்கிய ஜெ பிரபாகரன் என்பவர் 600-க்கு 536 மதிப்பெண்களும், அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 மதிப்பெண்களும், அருண்குமார் என்பவர் 506 மதிப்பெண்களும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..
இதையும் வாசிக்கலாமே...
பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!
குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!
வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!
பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!