தமிழ்நாட்டில் இன்று வெளியிடப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 91.32 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில் 7,50,000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வுகளை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து https://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள், தனித்தேர்வர்களும் பதிவு செய்த செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன்படி இந்த ஆண்டு தேர்வு எழுதிய 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு தனியார் என மொத்தமாக, 2478 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 0.53 சதவீதம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
125 சிறைவாசிகள் தேர்வுகளை எழுதிய நிலையில் அதில் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92 சதவீதமாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் 91.32% பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதம், தனியார் பள்ளிகள் 96.7 சதவீதம், மகளிர் பள்ளிகள் 96.39 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 86.96 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 94.7 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
கோவிஷீல்டு களேபரங்கள்... உயிர்காக்கும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பயமுறுத்தக் கூடியதா?
அயோத்தி கோயிலில் மீண்டும் மோடி.... தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு!
ஹாலிவுட்டில் சோகம்... டைட்டானிக் பட நடிகர் திடீர் மரணம்!
இன்று முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!
இன்று ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!