நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு... பதிவிறக்கம் செய்வது எப்படி?


நீட்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.ac.in மற்றும் neet.ntaonline.in இல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம்

நீட் நுழைவுத் தேர்வு மே 5 ஆம் தேதி இந்தியாவில் உள்ள 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5:20 மணிக்கு முடிவடையும், 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை தேர்வு எழுத நேரம் ஒதுக்கப்படும். ஆங்கிலம், இந்தி, அசாமிஸ், பெங்காலி, ஒடியா, கன்னடா, பஞ்சாபி, உருது, மலையாளம், மராத்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வு எழுத 23,81,833- பேர் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளார்கள்.

நீட் தேர்வு

நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டில் மாணவரின் பெயர், ரோல் எண், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு நகரம் மற்றும் மையம், அத்துடன் அந்தந்த குறியீடுகளுடன் பாடங்கள் இருக்கும். ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின் போன்ற உள்ளீடு செய்யவேண்டும்.

இதையும் வாசிக்கலாமே...

x