அரசு ஐடிஐ பயிற்சிக்கு ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்


திருவள்ளூர்: அம்பத்தூர், வடகரை, கும்மிடிப்பூண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, திருவள்ளூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அம்பத்தூரில் இரு பாலருக்கான அரசு ஐடிஐ, மகளிருக்கான அரசு ஐடிஐயும் , வடகரை ஐடிஐ (ஆதிந), கும்மிடிப்பூண்டி ஐடிஐ என 4 ஐடிஐ-க்கள் செயல்பட்டு வருகின்றன.

தொழிற் பயிற்சிகள்: இந்த 4 ஐடிஐ-க்களில் கணினி வன்பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு, கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், தையல் தொழில்நுட்பம், சுருக்கெழுத்தர், பொருத்துநர், மின்சார பணியாளர், கம்பியாள், நில அளவையர், ரெப்ரிஜிரேட்டர் மற்றும் ஏ.சி. டெக்னீசியன் உள்ளிட்ட பல தொழிற்பயிற்சி கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஓராண்டு மற்றும் இரு ஆண்டுகளில் வழங்கப்படும் இந்த பயிற்சிகளில், 8-ம் வகுப்பு மற்றும் 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் சேரலாம்.

2024-25-ம் கல்வியாண்டில், இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர www.skillltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் ஜூன் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விரிவான விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டி மையம் (044-29896032) மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (044-27660250) ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்களை அணுகலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x