6,244 குரூப்-4 பணியிடங்களுக்கு ஜூன் 9ல் தேர்வு... குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கும் பட்டியல் வெளியீடு!


டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

90 பணியிடங்களுக்கான குரூப் 1-ன் முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B and குரூப் 1-C தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது. 6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது என்று திருத்தப்பட்ட அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - டிஎன்பிஎஸ்சி தேர்வு

மேலும், குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஎஸ்ஓ, முனிசிபல் நிர்வாகம் உள்பட தற்போது குரூப் 2 ஏவில் இருந்த பணியிடங்கள் மீண்டும் குரூப் 2 பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், வனக்காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் - 4 தேர்வுகளை அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வின் மூலம் மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில், 108 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

x