மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!


தேர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் பெருவெள்ளம் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு ஜனவரி 4-ம் தேதி முதல் தொடங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தேர்வு அறிவிப்பு

கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அம்மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அரையாண்டுத் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

முதன்மைக் கல்வி அலுவலகம்

இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்க ஜனவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 4-ம் தேதி அறிவியல், 6-ம் தேதி கணக்கு தேர்வு, 9-ம் தேதி சமூக அறிவியல் தேர்வு, 10-ம் தேதி உடற்கல்வி தேர்வு நடத்தப்பட இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

x