அடுத்தடுத்து மயங்கி விழுந்த 17 ஆசிரியர்கள்...சென்னையில் பரபரப்பு!


சென்னை டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் அடுத்தடுத்து 17 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகம் எனப்படும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் 4 ஆசிரியர் சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினரும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தினரும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அடுத்தடுத்து 17 ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் மயக்கம் அடைந்து விழுந்தனர். இதையடுத்து அவர்கள் 17 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எத்தனை பேர் மயக்கம் அடைந்தாலும், உயிரை இழக்க நேர்ந்தாலும் சரி, கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மக்களவை தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா... போட்டியிடப் போவது உ.பியா... ம.பியா?

இன்று கடைசி தேதி... மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

x