யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு... ஆதித்யா ஸ்ரீவத்ஸ்வா முதலிடம் பிடித்து அசத்தல்!


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வுகளில் 1,143 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் ஆதித்யா ஸ்ரீவத்ஸ்வா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் குரூப் ’ஏ’ மற்றும் குரூப் ’பி’ பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நேர்காணல் நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களின் பட்டியலை இன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

முதலிடம் பிடித்த ஆதித்யா ஸ்ரீவத்ஸ்வா

இதன்படி மொத்தம் 1,143 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆதித்யா ஸ்ரீவத்ஸ்வா என்ற மாணவர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இரண்டாம் இடத்தை அனிமேஷ் பிரதானும் மூன்றாவது இடத்தை டோனூரு அனன்யா ரெட்டியும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் பொது பிரிவில் 474 பேரும், இ.டபிள்யு.எஸ். பிரிவில் 115 பேரும், ஓபிசி பிரிவில் 303 பேரும், எஸ்.சி., பிரிவில் 165 பேரும், எஸ்.டி., பிரிவில் 86 பேரும் என, மொத்தம் 1,143 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை பார்வையிடும் மாணவர்கள் (கோப்பு படம்)

தேர்வானவர்களின் மதிப்பெண் பட்டியல் அடுத்த 15 நாட்களுக்குள் வெளியிடப்படும். அதன் பின்னர் இவர்களுக்கு மாநிலங்கள் ஒதுக்கப்பட்டு, ஆட்சியர்கள், மாவட்ட வன அலுவலர்கள், பாஸ்போர்ட் அதிகாரி, வருமானவரி, ஜி.எஸ்.டி வரி அலுவலர்கள், வெளியுறவுத்துறை ஆணையர்கள் உள்ளிட்ட பயிற்சி பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

x