சென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 26 உதவிப்பேராசிரியர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு எண்001/RC/UD/FR/PR-10&20/2024-1 ஆகும். தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழுவின் விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும். 1.1.2024 தேதியின்படி 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்று பி.எச்டி முடித்திருக்க வேண்டும்.
உதவி ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, கற்பிக்கும் திறன் போன்ற தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.400, மற்ற இதர பிரிவினர் ரூ.1,000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எனவே தகுதியானவர்கள், www.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 5.4.2024 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதையும் வாசிக்கலாமே...