க்யூட் நுழைவுத்தேர்வு தேதியில் மாற்றமா? - யுஜிசி தலைவர் விளக்கம்!


'CUET UG' நுழைவுத் தேர்வு

"மக்களவைத் தேர்தல் அறிவிப்பால், மத்திய பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புக்கான 'CUET UG' நுழைவுத் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை" என்று பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல்

மத்திய பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புக்கான 'CUET UG' நுழைவுத் தேர்வு, மே 15 முதல் மே.31ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

இந்த மக்களவைத் தேர்தல் அறிவிப்பால், CUET UG நுழைவுத் தேர்வு தேதியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று மாணவர்களிடையே குழப்பம் எழுந்தது. இந்நிலையில், நுழைவுத் தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று யூஜிசி தலைவர் ஜெகதீஸ்குமார் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரையிலான காலகட்டத்தில் மே 20, 25 தேதிகளில் மட்டுமே தேர்தல் நாளில் தேர்வுகள் ஒத்து போகின்றன. அதனால், CUET-UG க்கு பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் மார்ச் 26 ஆம் தேதிக்குள் பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும். அதன் பின், எந்தெந்த இடங்களில் எத்தனை மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என்ற விவரம் தெரிய வரும். அதன் அடிப்படையில் க்யூட் யுஜி தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

திருமணம் செய்யலைன்னா தற்கொலை செய்துப்பேன்... இளைஞரை மிரட்டிய பெண் கைது!

x