சோகம்... தந்தை இறந்த நாளில் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவி!


உயிரிழந்த ரத்தினவடிவேல்

கடலூரில் தந்தை இறந்த நாளில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் மாணவி கலந்து கொண்டு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவடிவேல். இவர் நில அளவையர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ரத்தினவடிவேல் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி(16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று அவருக்கு இயற்பியல் தேர்வு இருந்தது.

இந்த நிலையில், அவரது தந்தை உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்தார். தந்தையின் உயிரிழந்த உடலைப் பார்த்துக் கதறிய மாணவி ராஜேஸ்வரி, தன் மனதைத் திடப்படுத்திக கொண்டு நேற்று நடைபெற்ற இயற்பியல் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றார். அவரைப் பார்த்த ஆசிரியைகள், சக மாணவிகள் ராஜேஸ்வரிக்கு ஆறுதல் கூறினர்.

இதன்பின் அவர் தேர்வை எழுதியுள்ளார். இதற்குப் பின் அவரது தந்தை ரத்தினவடிவேலுவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x